ஜூன் 16-30_2010

பொருளடக்கம்


Contant

 

குரல்

ஒருநாள் நான் தூங்கிக் கொண்டிருந்த போது என்னை அறியாமல் நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு, குறட்டை விட்டுத் தூங்கிய போது - காளியோ, தேவியோ கனவிலே தோன்றி- அல்லது தோன்றாமலே வந்து நின்று- சூலாயுதத்தால் என் நாவிலே எழுதி, அதற்குப் பிறகு எழுதிய கவிதைகள் அல்ல, எழுத்துக்கள் அல்ல இவைகள். இவைகள் எல்லாம் நான் கேட்டு, தெரிந்து, தெளிந்து, உணர்ந்து, அறிந்து அதன் பிறகு எழுதியவைகள் தான்.

-கலைஞர்,
தமிழக முதலமைச்சர்

அறிவியல் துறையில், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். புதுமையை மாணவர்கள் உருவாக்க வேண்டும்; ஆராய்ச்சியில் அதிகமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும்; இவற்றால் நாடு பொருளாதாரத்தில் முன்னேறி சூப்பர் பவர் பெற்றுவிடும்.

-முகமது அமீது அன்சாரி,
இந்தியத் துணை ஜனாதிபதி

ஜாதி ஒழியும் நாளில் இடஒதுக்கீடு முறையும் ஒழிக்கப்படும். தலித்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பற்றி மக்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் மாறாதவரையில், மக்களிடையே சமத்துவம் கொண்டுவர எத்தனை சட்டம் கொண்டுவந்தாலும் பயன்தரப் போவதில்லை.

- மீரா குமார்,
மக்களவைத் தலைவர்

இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.

தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்களர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.

-லீ குவான் யூ,
சிங்கப்பூர் முன்னாள் அதிபர்


Warning: include(archives/2010.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/unmaionl/public_html/2010/june/16-31/page25.php on line 126

Warning: include() [function.include]: Failed opening 'archives/2010.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/unmaionl/public_html/2010/june/16-31/page25.php on line 126
send to friend
Bookmark and Share
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome