மடல் ஓசை

உண்மை இதழில் (பிப்ரவரி 16.28.2010) கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் எழுதியுள்ள கனம் நீதிபதிகளே....! எந்த நோய்க்கு எந்த மருந்து? எனும் கட்டுரை இடஒதுக்கீடு குறித்த நீண்ட விளக்கத்-தினை அளித்தது. இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் சலுகைகள் யாரிடமும் யாசகமாகக் கேட்டுப் பெற்றதல்ல, மக்களின் பல போராட்டங்-களுக்குப் பிறகும், சமூக நீதியில் அக்கறை-கொண்ட பலர் ரத்தம் சிந்தியதன் விளை-வாகவும், கிடைக்கப்பெற்றதே வகுப்புரிமை ஆணை (communal G.O) என்பதை கேரள உயர்நீதிமன்ற கனம் நீதிபதிகள் நினைவு-படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

இட ஒதுக்கீடு என்பது, இச்சமுதாயத்தில் ஜாதியின் பெயரால் பல கூறுகளாக பிளவு-படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்-களின் பிறப்புரிமை ஆகும்.

சீ. இலட்சுமிபதி
தாம்பரம், சென்னை - 45


சித்தர்களில் பாடியவை அத்தனையும் பகுத்தறிவு சாட்டையடியாக இருக்கின்றன. ஆன்மீகப் போலிகளை அம்பலப்படுத்தும் அந்தத் தொடர் அருமையாக இருக்கிறது.

- டி.எஸ். கணேஷ், மதுரை - 9

பல்வேறு துறைகளிலும் பகுத்-தறி-வாளர்கள் இருக்கின்றார்கள் என்பதை உண்மையைப் படித்த போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது.

- ம. குணசுந்தரி, ஆரல்வாய்மொழி

புதுப்பாக்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளன. அழகியலையும் அவலங்-களையும் மட்டுமே கவிதைகளாக எழுதும் சூழலை பகுத்தறிவு சார்ந்த கவிதைகளை வார்த்-தெடுக்கும் உண்மையின் பணியை பாராட்டு-கிறேன்.

- கவிஞர் பாலா. மணியன் திருக்கடையூர்.

டாக்டர். ஷாலினி எழுதும் யார் இந்த பெரியார்? விறுவிறுப்பாகச் செல்கிறது. உளவியல் உண்மைகளை விளக்குவது பயனுள்ளதாக உள்ளது.

- சு. அன்புக்கனி, முசிறி


படைப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும்

உண்மை வாசகர்களே, படைப்பாளர்-களே, உங்கள் ஒத்துழைப்பே உண்மையை மென்மேலும் வளரச்செய்கிறது. உங்களுக்-கான வேண்டுகோள் இது. கட்டுரைகள் குறித்த திறனாய்வு மடல்-களையும், கேள்விகளையும் அஞ்சல் அட்-டையில் மட்டுமே எழுதுங்கள். தனித் தனியே எழுதுங்கள். முகவரியோடு அஞ்சல் குறி-யீட்டு எண்ணை மறவாமல் குறிப்-பிடுங்கள்.

படைப்புகளை அனுப்பும்போது ஏ4 வெள்ளைத்தாளில் எழுதி அனுப்புங்கள்.

மறவாமல் செல்பேசி அல்லது தொலை-பேசி எண்ணையும், மின்-னஞ்சல் முகவரி-யை-யும் குறிப்பிடுங்கள்.

தேர்வு செய்யப்படாத படைப்புகள் திருப்பி அனுப்ப இயலாது. எனவே நகல் எடுத்து வைத்துக் கொண்டு படைப்புகளை அனுப்புவது நல்லது.

கையால் எழுதும்போது கை-யெழுத்து தெளிவாகவும் புரியும்படியும் எழுதுதல் நலம். தட்டச்சு ஒளியச்சு செய்தால் மிக நல்லது.

- - பொறுப்பாசிரியர்.