குரல்
![]() |
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பயோ-மெட்ரிக் எனப்படும் கைரேகைப் பதிவு வருகைப் பதிவேடுமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
-வி.கே.சுப்புராஜ்,
சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு, தேர்வு முடிவு வெளியான அன்றே ரூ 1லட்சம் பரிசாக அளிக்கப்படும்.
-மா.சுப்பிரமணியன்,
சென்னை மாநகராட்சி மேயர் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாத, திறமை இல்லாத ஆசிரியர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரப்ப மொய்லி,
மத்திய சட்ட அமைச்சர் அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி ஹெட்லியிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படும் என அதிபர் ஒபாமா உறுதியளித்துள்ளார். அணு பாதுகாப்பு மாநாட்டின் போது, பல்வேறு நாடுகளின் தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக இருந்தது.
-மன்மோகன்சிங்
இந்தியப் பிரதமர் பர்தாஅணிவதும், தலையை மூடிக் கொள்வதும் பெண்கள் விருப்பம். இதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆசிரியர்கள் பர்தா அணிந்துதான் வர வேண்டும் என்று கல்வி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தமுடியாது. யாராவது ஒரு பெண்ணை பர்தா அணியும்படி கட்டாயப்படுத்தினால் அது அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமையை மீறிய செயலாகும்.
- வங்கதேச உயர்நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து...
![]() |
உலகின் எந்த மூலையில் அணு ஆயுதத் தாக்குதல் நடந்தாலும், அது உலகக் கட்டமைப்பின் அடித்தளத்தை அழித்துவிடும். அணு ஆயுதப் பரவல் உலகப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.
- ஹிலாரி கிளின்டன்
அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்
தமிழ்ப் படிப்பு என்பது இலக்கணம், இலக்கியம் மட்டும் அல்ல. தமிழ் குறித்து வெகு மக்களின் புரிதல் தவறாக இருப்பதற்கு, தமிழாசிரியர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள். இவர்கள் பண்டித மரபிலேயே மொழியைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த நிலை முற்றிலும் மாற்றப்பட வேண்டும்.
- வீ. அரசு சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர்


