மே 16-31_2010

பொருளடக்கம்


Contant

 

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

புதுடில்லியில், புதிய பெரியார் மய்யம் என்ற 5 அடுக்குக் கட்டடம் 2.5.2010 அன்று தமிழ்நாடு முத-லமைச்சர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்டவுடன், அடுத்த நாளே (3.5.2010) அதன் கருத்தரங்கக் கூடத்தில் முதல் சமூகநீதி கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே. ராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். பல்துறை அறிஞர்களாகிய, டாக்டர் எஸ். இராசரத்தினம், டி.பி. யாதவ் (முன்னாள் மத்தியக் கல்வி அமைச்சர்) ஆகியோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவை அமைப்பாளர் திரு. அனுமந்த்ராவ் எம்.பி. நிறைவுரை நிகழ்த்தினார். நான் கருத்தரங்கிற்குத் தலைமை வகித்தேன்.

பிரபல கருநாடக சமூகநீதிப் போராளி ரவிவர்மகுமார் (கருநாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர், மூத்த வழக்கறிஞர்), உச்ச-நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சமூகநீதிக்கான வழக்-கறிஞர் கழகத்தின் நிருவாகத் தலைவருமான சுப்-பாராவ், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தேசிய யூனியன் பொதுச்செயலாளர் திருமதி கீதா, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்-டோர் ஊழியர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்-செயலாளர் கோ. கருணாநிதி (யூனியன் வங்கி), பகுத்தறி-வாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் முதலியோர் பங்கேற்றதில் முக்கிய 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் உடனடியாக, இப்போது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (சென்சஸ்) ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். மக்கள் தொகையில் 80 விழுக்காடு உள்ள மக்களின் உண்மைக் கணக்கெடுப்பு - சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தேவைப்படுகிறது. அப்போதுதான் சமூகநீதி _ இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பது ஒரு முக்கிய தீர்மானம் ஆகும்.

அதனைத் தட்டிக் கழித்து, மத்திய அரசின் அதிகார-வர்க்கம் குறுக்குசால் ஓட்டி, அதை இப்போது நடத்த சாத்தியமில்லை என்று ஒரு சூழ்ச்சிப் பொறியின்மூலம், உயர்ஜாதி வர்க்கத்தின் ஏகபோக ஆதிக்கம் கல்வி, உத்தியோகத்தில் இருப்பதை மறைத்து, அதனை நிரந்-தரமாக்கிட முயலுகிறது!

ஆகா! இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஜாதி வாரியாக கணக்கெடுக்கக் கோரிக்கையா? என்று ஏதோ மிகப்-பெரிய ஜாதி ஒழிப்பு வீரர்களைப்போல், பார்ப்பன ஏடு-களும், தலைவர்களும், அவர்களால் கையகப்படுத்தப்-பட்டுள்ள பார்ப்பனரல்லாத, கீழ்ஜாதி தலைவர்களில் சிலரும் கேட்டு தங்களது ஞானத்தை விளம்பரப்படுத்திக் கொள்கின்றார்கள்.

நாம் அவர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் இதோ:

1. நாட்டில் ஜாதியே இல்லையா? ஒழிந்துவிட்டதா?

2. இந்த 63 ஆண்டுகால சுதந்திரத்தில் ஜாதி ஒழிப்-புச் சட்டம் கொண்டு வந்தார்களா? நடைமுறைப்-படுத்தப்பட்டதா? இல்லையே!

3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பதை இவர்கள் யாராவது மறுக்க முடியுமா?

4. நாட்டில் திருமணங்களில் 90 விழுக்காடு ஜாதி பார்த்துத்தானே நடைபெறுகிறது?

5. பார்ப்பனர்கள், ஜாதி வாரி சென்சஸ் கூடாது என்று கூறும் மேதாவிலாசங்கள் தங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறதே _ அது எதற்காக? முதுகு சொறிந்து கொள்வதற்கா?

பின் ஏன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு மட்டும் நெருப்புக் கோழி மனப்பான்மை?

நடைமுறை சாத்தியமானதல்ல இப்போது என்று கூறும் மத்திய அரசின் அமைச்சர், அதிகாரிகளைக் கேட்கிறோம்.

அதில் என்ன சிக்கல்? ஒன்றுமில்லையே!

ஒன்றுமில்லையே!

ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டுப் பட்டியல் மாநிலங்களில் உள்ளது. (S.C., S.T., OBC) இதுபோல பள்ளிச் சான்றிதழ்களில் உள்ளது! அந்த யதார்த்தத்தை உணர்ந்து பதிவு செய்வதில் என்ன கஷ்டம்? கல்வி நிறுவனங்களில் சேரும்போது, தவறான தகவல் தர முனைந்தால், ஆள் மாறாட்டம், ஜாதி மாறாட்டம் சான்றிதழில் பொய்க்கூற்று என்று கூறி வழக்குப் போட்டுத் தண்டிக்கும் நிலையில், இதற்கென என்ன தனி ஏற்பாடு?

1931 ஆம் ஆண்டிற்குப் பிறகு அம்முறை மாற்றப்பட்டு விட்டது என்பது போதுமான அறிவார்ந்த காரணமல்ல. வெறும் எண்ணிக்கை எடுப்பது என்பதற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவா?

முக்கிய தகவல்கள் இல்லாமல் மொட்டைத் தாதன் குட்டையில் வீழ்ந்தான் என்பது போன்ற தகவலால் என்ன லாபம்?

சமூகநீதி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்-காகவே இந்த ஜாதியைத் தவிர்க்கும் சூழ்ச்சியான இம்முயற்சி!

அனைத்துப் பெரும்பான்மை மக்களும் இதனை எதிர்த்து, ஜாதி வாரியான சென்சஸ் எடுக்க மத்திய அரசினை வற்புறுத்திடவேண்டும்.

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் லாலுபிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பிரதான எதிர்க்கட்சியாகிய பா.ஜ.க.விலும், ஆளும் காங்கிரசிலும் இந்தக் குரல் வேகமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது!

- கி.வீரமணி
ஆசிரியர்


Warning: include(archives/2010.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/viduthalaiin/unmaionline.com/2010/may/16-31_2010/page01.php on line 154

Warning: include() [function.include]: Failed opening 'archives/2010.php' for inclusion (include_path='.:/usr/local/lib/php:/usr/local/php5/lib/pear') in /home/viduthalaiin/unmaionline.com/2010/may/16-31_2010/page01.php on line 154
print
send to friend
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome