குரல் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும்-போது பெற்றோரின் கல்வித் தகுதியைப் பார்க்கிறார்கள். படிக்கப் போவது குழந்தைகளா அல்லது அவர்களின் பெற்றோர்களா? குழந்தைகளுக்கு, கேள்வி கேட்கும் தன்னம்பிக்கையையும் உரிமையையும் ஆசிரியர்கள் கொடுத்தாலே படிப்பைக் குழந்தைகள் பார்த்துக்-கொள்வர். கவிஞர் கனிமொழி, இந்தியர்களிடையே சோம்பல் அதிகமாக உள்ளது. சீனர்களைப் போல் கடினமாக உழைக்கும் பழக்கத்தை இந்தியர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தலாய் லாமா, தமிழக அரசு, நலவாரியம் அமைத்து அரவாணிகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. தொழில் தொடங்க 20 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கி வருகிறது. தமிழகத்தில்தான் அரவாணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. திருநங்கை கல்கி அரவாணிகள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல், சிறுதொழில் தொடங்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். சேலம் ஷில்பா, மனித உரிமை பற்றி அதிகம் பேசும் அமெரிக்கப் பெண்களில், மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கணவராலோ அல்லது சக ஆண் நண்பர்களாலோ அல்லது தந்தையாலோ குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்-படுகின்றார்கள். கவிஞர் சல்மா, சிறிய அளவில் ஏற்படும் பருவநிலை மாற்றம்கூட எரிமலை சீற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை உருவாக்கலாம். பில் மெக் கைர் லண்டன் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக ஆள் இல்லா ஆராய்ச்சி இயந்திரம் மூலம் ஆழ்கடலில் உள்ள தாதுப்பொருள்களைக் கண்டறியும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிதிவிராஜ் சவான், |
||||