Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2021 -> ஜனவரி 16-31, 2021 -> ஒரு வரிச் செய்திகள் 28.12.20 முதல் 11.01.21 வரை

ஒரு வரிச் செய்திகள் 28.12.20 முதல் 11.01.21 வரை

28.12.2020  -  தமிழ்நாடு அரசு நடத்தும் ‘கல்வி டி.வி.யில் திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் காட்டுவதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

28.12.2020 - எங்களது மனதின் குரலையும் மோடி கேட்க வேண்டும். டில்லியில் விவசாயிகள் ஓசை எழுப்பி போராட்டம்.

29.12.2020 - 38ஆவது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை. முதல்வர் காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

29.12.2020 - சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த பா.ஜ.க. வேட்பாளர் - மங்களூரில் போக்சோ சட்டத்தில் கைது.

29.12.2020 - நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

29.12.2020 - 70 ஆண்டு சாதனையை மேயராக 21 வயது மாணவி பதவியேற்று முறியடித்தார்.

30.12.2020 - ராமன் கோயில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் கொள்ளை!

30.12.2020 -  நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்குப் பரிசளித்த கணவர் - ராஜஸ்தானில் விசித்திரம்.

31.12.2020 - பரிகார பூஜை செய்வதாகக் கூறி பெண்ணைக் கொன்ற மந்திரவாதி வெள்ளக்கோவில் பகுதியில் நடந்த பயங்கரம்.

31.12.2020 - பட்டாசு தொழிற்சாலைகளுக்கு நலவாரியம்  -  தமிழக அரசு அரசாணை வெளியீடு.

31.12.2020  -  மதவெறிப் பிரச்சனை எழும்போது ஓட்டும், இடங்களும் முக்கியமல்ல - பினராயி விஜயன் பேச்சு.

1.1.2021 _ உணவுப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும், வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற கேரள சட்டமன்றம் தீர்மானம்.

2.1.2021 - பூர்வகுடியான பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கீதத்தின் பாடல் வரிகளை மாற்றம் செய்ய பிரதமர் ஸ்காட் மொரிசன் முடிவு.

3.1.2021 - ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் டில்லியில் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

4.1.2021 - சென்னை உயர்நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பொறுப்பேற்பு.

5.1.2021 - டில்லியில் தமிழ்மொழி, கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகடாமியை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

5.1.2021 - அய்.அய்.டி.யில் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு வேண்டாம் என்கிற கல்வி அமைச்சக முடிவுக்கு, சமூகநீதி மற்றும் மேம்பாடு அமைச்சகம் எதிர்ப்பு.

6.1.2021 - ரூ.56,000 கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனத்தை வெறும் ரூ.720 கோடிக்கு விற்க முயலும் மத்திய பா.ஜ.க அரசு!

6.1.2021 - மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். - முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

7.1.2021 - பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது, சி.பி.அய். அதிரடி நடவடிக்கை.

7.1.2021 - உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

8.1.2021  -  ஒடிசாவில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர இடஒதுக்கீடு அளிப்பது குறித்து உயர்நிலைக் குழுவை அரசு அமைத்துள்ளது.

9.1.2021 -  முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு -  யாழ்ப்பாணத்தில் பதற்றம், மாணவர்கள் போராட்டம்.

10.1.2021 -  சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம்  - அகமண முறையை வளர்க்கும் கர்நாடக முதல்வர்.

11.1.2021 - சிவகங்கை அருகே கண்மாயில் கி.பி.12ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு.

தொகுப்பு : மகிழ்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ஒரு வரிச் செய்திகள் 28.12.20 முதல் 11.01.21 வரை in FaceBook Submit ஒரு வரிச் செய்திகள் 28.12.20 முதல் 11.01.21 வரை in Google Bookmarks Submit ஒரு வரிச் செய்திகள் 28.12.20 முதல் 11.01.21 வரை in Twitter Submit ஒரு வரிச் செய்திகள் 28.12.20 முதல் 11.01.21 வரை in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

பிப்ரவரி 16-28, 2021

  • 53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
  • அய்யாவின் அடிச்சுவட்டில்.. : இயக்க வரலாறான தன் வரலாறு (262)
  • உணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை
  • சிந்தனை : கோயில் நகரம் என்றால்...
  • தலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே!
  • நாளும் செய்தியும் : ஒரு வரிச் செய்திகள் (28.1.2021 முதல் 10.2.2021 வரை)
  • பெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்
  • முகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்!
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்!
  • ரோபோ மனிதர்கள்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.