Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2018 -> ஆகஸ்ட் 01-15 -> காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்!

காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்!

 தொடங்கப்படாத அம்பானி, அனில் அகர்வால் கல்வி நிறுவனங்களுக்கு தரச் சான்று! தாராளமாய் மானியம்!

 

நாட்டின் நம்பர் ஒன் முதலாளியான முகேஷ் அம்பானி, இன்னும் துவங்காத ஒரு கல்வி நிறுவனத்திற்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற தரச்சான்றி தழுடன், ரூ. 1000 கோடி மானியத்தையும் மோடி அரசு வழங்கியுள்ளது. இதற்கான எதிர்ப்பும், கண்டனங்களும் இன்னும் ஓயாத நிலையில், ஸ்டெர்லைட் முதலாளியான வேதாந்தா அனில் அகர்வாலின் துவங்கப்படாத கல்வி நிறுவனத்திற்கும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் என்று சான்றிதழ் வழங்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகத்தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கான - 20 இந்திய பல்கலைக் கழகங்களைத் தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது. ஆனால், இந்தக்குழு பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (IISC),), மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), டில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) ஆகிய 3 அரசு நிறுவனங்கள், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் 6 நிறுவனங்களை மட்டும்   எனப்படும் அந்த உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் என்று தேர்வு செய்தது. இதனடிப்படையில், அந்த 6 நிறுவனங்களுக்கும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

ஆனால், ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னும் ஏட்டளவில் கூட துவங்கப்படாத நிறுவனம். நாட்டின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, இனி மேல்தான் இந்த நிறுவனத்தைத் துவங்கப் போவதாக கூறப்படுகிறது. எனவே, துவங்காத நிறுவனத்தை சிறந்த நிறுவனமாக அறிவித்து ரூ.1000 கோடி ஒதுக்கியதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. துவங்கப்படாத நிறுவனத்தை எவ்வாறு தர நிர்ணயம் செய்தார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியதுடன், 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டையும் கேள்விக்கு உட்படுத்தினார்கள். ஆனால், முறையான பதில் எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் ஆகிய மூன்று விதிகளின் கீழ் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மட்டும் ஜவடேகர் கூறினார்.

இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் என்ற பட்டியலில், ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் துவங்கவுள்ள கல்வி நிறுவனத்திற்கும்   தரத்தை வழங்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தர நிர்ணய சான்றிதழ் கேட்டு, வேதாந்தா குழுமம் ஏற்கெனவே மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும், தங்களின் தரத்தை  மேம்படுத்திக் கொள்ள ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின்  அவலங்கள், அநியாயங்கள்! in FaceBook Submit காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின்  அவலங்கள், அநியாயங்கள்! in Google Bookmarks Submit காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின்  அவலங்கள், அநியாயங்கள்! in Twitter Submit காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின்  அவலங்கள், அநியாயங்கள்! in Twitter

உண்மையில் தேட

wrapper

டிசம்பர் 01-15 2019

  • இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!
  • அப்படிப்போடு
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?
  • ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!
  • உங்களுக்குத் தெரியுமா?
  • உணவே மருந்து
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்
  • கவிதை : வியப்புமிகு ஆசிரியர்
  • கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
  • கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?
  • கவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்!
  • சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
  • சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!
  • சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்
  • சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!
  • சிறுகதை : வேதங்கள் சொல்லாதது
  • சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?
  • தகவல் களஞ்சியம்
  • தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
  • தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!
  • நுழைவாயில்
  • நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
  • நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!
  • நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!
  • நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!
  • பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்
  • பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
  • முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
  • வாசகர் கடிதம்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.