Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> செப்டம்பர் 1-15 2019 -> வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி

வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி

அ.ப.நடராசன், உடுமலை

 ராஜ்ய சபாவின் எதிர்கட்சித் தலைவராக இருப்பவர்கட்குப் பத்மபூசண் பட்டம் தருவது மிகவும் அரிதான ஒன்றாகும். ஆனால், 1967இல் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரத்தினசாமி பத்மபூசண் பட்டம் பெற்றுள்ளார்.

இவரைப் பற்றி..

இரத்தினசாமி (1885-_1967). இவரது தந்தையின் பெயர் மரியதாஸ். இவர் தன் மகனுக்கு இரத்தினசாமி என்று பெயர் வைத்தார். ஆனால், இரத்தினசாமி, ருத்தினசாமி என்றே எப்போதும் எழுதுவார்.

இரத்தினசாமி அவர்கள் செகந்திராபாத்தில் உள்ள செயின்ட் அன்னீஸ் பள்ளியிலும், 1903இல் கூடலூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் மெட்ரிகுலேசன் படிப்பையும், 1907இல் தன் பட்டப் படிப்பை ஹைதராபாத் நிஜாம் கல்லூரியிலும் முடித்தார். படிக்கும் காலத்தில் நிறைய நாடகங்களில் நடித்துப் பெயர் பெற்றார். பின் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கல்லூரியில் வரலாறு படித்தார். அதே சமயம் லண்டன் கிரேஸ் இன் கல்லூரியிலும் படித்து பார்_அட்_லா பட்டமும் பெற்று 1911இல் இந்தியா திரும்பினார். தன் தந்தையாரின் வற்புறுத்தலின் பேரில், தான் நீதிமன்றங்களில் வழக்காடுவதில்லை என்று முடிவு செய்தார்.

கல்வியாளர், நிருவாகி, அரசியல்வாதி

வரலாற்றுப் பேராசிரியர் இரத்தினசாமி அவர்கள், மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவர் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். தன் 19ஆவது வயதில் கல்வி கற்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார். அப்போதே இலத்தீன் மொழியைக் கற்றிருக்கிறார். இங்கிலாந்து போகும்போது வழியில் ரோமில் இறங்கி போப்பை சந்தித்து இலத்தீன் மொழியிலேயே பேசியவர் ஆவார்.

இங்கிலாந்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த லார்டு ஆக்டஷ் வரலாற்றுப் பாடம் நடத்துவது என்பது, நாடகம் நடிப்பது போல் இருக்குமாம். இவர் புத்தகங்கள் எழுதியதில்லை. ஆனால், இவர் பாடம் நடத்தும்போது சுருக்கெழுத்தாளர்கள் சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டு வருவார்களாம். அதைத்தான் இரண்டு புத்தகங்களாகப் பதிப்பித்தார்கள். அவை,  Letters on Modern History மற்றும்  Letters on French Revolution   ஆகியவை. இப்படிப்பட்ட பேரறிவாளரிடம் பாடம் கற்கச் சென்றவர்தான் இரத்தினசாமி.

லண்டன் சென்ற இரத்தினசாமி லார்டு ஆக்டஷை சந்திக்கச் சென்றார். லார்டு ஆக்டஷின் உதவியாளரைச் சந்தித்து விவரம் சொன்னார். லார்டு ஆக்டஷ் 15 நாள்களுக்கு வேறொரு வேலையில் ஈடுபட்டிருப்பதால் அவரை இப்போது சந்திக்க முடியாது என்றார். 15 நாள்கள் கழித்து வந்து பார்க்கச் சொன்னார். 15 நாள்கள் கழித்து இரத்தினசாமி அவர்கள் லார்டு ஆக்டஷை சந்தித்து, தான் வரலாறு கற்க வந்திருப்பதாகக் கூறினார். அப்போது லார்டு ஆக்டஷ் 100 பிரெஞ்சு புத்தகங்களைக் கொடுத்து, “இதைப் படித்துவிட்டு 3 மாதங்கள் கழித்து வந்து பார்’’ என்றாராம்.

இரத்தினசாமி, புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, “எனக்கு பிரெஞ்சு தெரியாது’’ என்றாராம். அதற்கு ஆக்டஷ், “அப்படியானால் முதலில் பிரெஞ்சு மொழியைப் படி. பின்பு இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு வா’’ என்றாராம்.

இரத்தினசாமி பிரெஞ்சு மொழியைப் படித்த பின்பு, 100 புத்தகங்களையும் படித்து முடித்து விட்டு 3 மாதம் கழித்து குறிப்பிட்ட நாளில் ஆக்டஷ் அவர்களைச் சந்திக்கச் சென்றார். பின்புதான் லார்டு ஆக்டஷ், இரத்தினசாமியை தன் வகுப்பில் மாணவனாகச் சேர்த்துக் கொண்டார்.

இப்படிப்பட்டவரிடம் வரலாற்றுப் பாடம் படித்து முடித்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகச் சேர்ந்தார். அப்போதெல்லாம் வரலாறு படிக்கும்போது சிஷீஸீstவீtutவீஷீஸீணீறீ லிணீஷ்வும் சேர்த்துப் படிக்க வேண்டும்.

இரத்தினசாமி அப்போதைய மெட்ராஸ் கார்ப்பரேசனில் 1921ஆம் ஆண்டில் கவுன்சிலர் ஆனார். அப்போதைய பச்சையப்பன் கல்லூரியில் முதல்வராக ஆக்கப்பட்டார். அதுவரை ஆங்கிலேயர்களே அக்கல்லூரிக்கு முதல்வர்களாக இருந்துள்ளனர். 1927 வரை அங்கு முதல்வராக இருந்துள்ளனர்.

1925இல் இரத்தினசாமி தன் 40ஆவது வயதில் மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலின் தலைவர் ஆனார்.

1927இல் சென்ட்ரல் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1928இல் முதல் இந்திய பிரின்சிபாலாக மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் அமர்ந்தார்.

1930இல் மெட்ராஸ் சர்வீஸ் கமிசன் உறுப்பினரானார்.

1942இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இரண்டு தடவை இருந்திருக்கிறார். (1942_1948)

அவர் எப்போதும் ஏழையாகவே இருந்திருக்கிறார். இவர் வகித்த பதவிகளில் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகள் இருந்திருந்தாலும் இவர் அதை நாடவில்லை. பணத்திற்கு ஆசைப்பட்டதும் இல்லை. பணம் தேடுவதற்கான முயற்சி எடுத்ததும் இல்லை. சிலீணீக்ஷீணீநீtமீக்ஷீ, ஞிவீsநீவீஜீறீவீஸீமீ இவைதான் இவரது தாரக மந்திரம்.

இரத்தினசாமி பத்திரிகை எழுத்தராக இருந்து நிறைய எழுதியுள்ளார். “ஸ்டேண்டேர்டு, டெமாக்ரசி’’ என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கும் ‘தாண்டன்’ என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்துள்ளார்.

இரண்டு தடவை, ராஜ்ய சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரா கட்சியின் சீரிய பேச்சாளராகப் பல தடவைகள் பேசியுள்ளார்.

இவர் பெற்ற பட்டங்கள்:

1.            1930இல் Companian of the order of the Indian Empire CIE

2.           1937இல் போப் பயஸ் ஙீமி அவர்களால் வழங்கப்பட்ட  KCSG knight commander cross of the order of St.Gregory the Great

3.          1968இல் இந்திய அரசாங்கம் ‘இலக்கியம் மற்றும் கல்விக்காக’ பத்ம பூசண் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் N.G.ரங்கா அவர்கள், “பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடியவர், அறிஞர், சீரிய படிப்பாளி, நிருவாகி’’ என்று இரத்தினசாமியைப் பாராட்டியுள்ளார்.

இவரால் எழுதப்பட்டு வெளிவந்த நூல்கள்:

1.    1923 - Philosophy of Mahatma Gandhi
2.    1928 - The revison of the constitution
3.    1932 - Making of the state
4.    1932 - Influences on the British Administrative system.
5.    1949 - India from the Dawn
6.    1953 - Principles and practice of Public Administration.
7.    1957 - Truth shall prevail
8.    1958 - Every man’s Constitution of India
9.    1961 - Principles and practice of Foreign Policy
10.    1964 - India after god
11.    1969 - Violence cause and cure
12.    1971 - Agenda for India

தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தாலும் சாதனைகளைச் சாதித்துக் காட்ட முடியும் என்பதற்கு ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் மரியதாஸ் ரத்தினசாமி ஆவார்.

ஆதாரம்: மரியதாஸ் ருத்தினசாமி, (இணையம்) விக்கிபீடியா

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி in FaceBook Submit வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி in Google Bookmarks Submit வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி in Twitter Submit வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி in Twitter

உண்மையில் தேட

wrapper

டிசம்பர் 01-15 2019

  • இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!
  • அப்படிப்போடு
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?
  • ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!
  • உங்களுக்குத் தெரியுமா?
  • உணவே மருந்து
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்
  • கவிதை : வியப்புமிகு ஆசிரியர்
  • கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
  • கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?
  • கவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்!
  • சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
  • சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!
  • சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்
  • சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!
  • சிறுகதை : வேதங்கள் சொல்லாதது
  • சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?
  • தகவல் களஞ்சியம்
  • தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
  • தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!
  • நுழைவாயில்
  • நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
  • நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!
  • நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!
  • நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!
  • பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்
  • பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
  • முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
  • வாசகர் கடிதம்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.