Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> செப்டம்பர் 16-30 2019 -> கவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்?

கவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்?

அடிமைகளா தமிழரெலாம்? தன்மா னத்தை

                அடகுவைத்துத் திரிகின்ற இனமா நாமும்?

குடியாட்சி மாண்புதனை முடிந்த மட்டும்

                குழிதோண்டிப் புதைக்கின்ற கொடுமை என்னே!

அடியாட்கள், அதிகாரம் வரம்பு மீற

                அந்நாளின் உரிமையெலாம் பறித்தல் கண்டும்

நடிப்பாரை மிகநம்பிக் கெட்டார்; நாட்டின்

                நடப்பினையே உணராமல் தவிக்க லானார்!

 

தமிழகத்தைப் பாலைவனம் ஆக்கு தற்கே

                தடித்தனமாய் வடவரிங்கே முயலு கின்றார்;

தமிழரையே விலைகொடுத்து வாங்கு தற்கே

                தன்மானம் இல்லாரைத் தேடிக் கண்டு

தமிழ்நாட்டை வளைத்துவிட எண்ணு கின்றார்

                தக்கைகளா வெள்ளத்தைத் தடுக்கும்? நெஞ்சம்

நிமிர்ந்தெழுந்தே நெருப்பாகும்; நரிக்கூட் டத்தை

                நெருங்காமல் கதிகலங்க விரட்டு வார்கள்!

 

குற்றங்கள் இழைத்துவரும் கொடியர் தம்மைக்

                கூலிகளாய் வாலாட்டும் ஏவல் நாயாய்

முற்றாகத் தலையாட்டிப் பொம்மை யாக்கி

                முன்னேற்றக் கதவுகளை மூடி விட்டார்;

குற்றுமியை, நெற்பதரைத் துணையாய்க் கொண்டு

                குளிர்காய எண்ணுகிறார்; பெரியார் மண்ணில்

வெற்றர்தம் கனவனைத்தும் விழலுக்கு நீராகும்;

                வெள்ளாடா வேங்கையினை வீழ்த்தும்; வெல்லும்?

 - முனைவர் கடவூர் மணிமாறன்

 

 

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit கவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்? in FaceBook Submit கவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்? in Google Bookmarks Submit கவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்? in Twitter Submit கவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்? in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.