Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2019 -> டிசம்பர் 01-15 2019 -> தகவல் களஞ்சியம்

தகவல் களஞ்சியம்

பெரிய துறைமுகம்

உலகில் அதிக சரக்குகளைக் கையாள்வதன் அடிப்படையில் உலகின் பெரிய துறைமுகமாக சீனாவின் ‘ஷாங்காய்’ துறைமுகம் விளங்குகிறது. இது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது. இது 2010ஆம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகத்தைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிசியான துறைமுகம் எனப் பெயர் பெற்றது.

இந்தத் துறைமுகம் 2016ஆம் ஆண்டு 370 கோடி ‘டிஇயூ’க்களைக் கையாண்டது. ‘டிஇயூ’ என்றால் ‘டுவென்ட்டி பூட் ஈக்வலன்ட் யூனிட்’ ஒரு கப்பலில் சரக்கு சுமக்கும் திறனை அளவிடப் பயன்படுகிறது.

இது ஆறு, கடல் சேர்ந்த துறைமுகமாக விளங்குகிறது.

 ******

காந்தி அமைதிப் பரிசுதான் இந்தியாவில் அளிக்கப்படும் மிகப் பெரிய தொகை கொண்ட பரிசாகும். பரிசுத்தொகை ஒரு கோடி ரூபாய்.

பொலிவியா நாட்டில் பூபாரெய் மண்டி என்கிற ஒரு வகை தாவரம் உள்ளது. இது 80 முதல் 150 ஆண்டுகளுக்கு பின்பு பூப்பூக்கத் தொடங்குமாம்!

 ******

உலகின் முதல் பெண் விமானி இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யேல் பிங்கல் ஸ்டீபன் என்பவர் ஆவார்.

இந்திய அரசியலமைப்பு முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் டாக்டர் சச்சிதானந்தா சின்ஹா.

மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்னும் வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளைப் பறித்து உண்ணும்.

******

தேனீ!

“தேனீக்கள் அழிந்துவிட்டால், மனித இனம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழாது...’’ என்ற ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனின் கூற்றை இப்போது பலரும் பரிசீலித்து வருகின்றனர். உலகளவில் நடக்கும் விவசாயத்தில் 70 சதவிகிதம் தேனீக்களைச் சார்ந்தே இருக்கிறது. தேனீக்களால் நிகழும் மகரந்தச் சேர்க்கையால் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. தவிர, தேன் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல வழிகளில் மனிதனுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படி நிறைய காரணங்களை அடுக்கி உலகின் முக்கிய உயிரினமாக தேனீயை முன்மொழிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

******

உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1913.

ஆப்பிரிக்காவில் உள்ள சிட்ருங்கா என்னும் மான் இனம் தண்ணீரில் மிதந்தபடி உறங்கும்.

நாய்களுக்கு என உணவு விடுதி உள்ள நகரங்கள் டோக்கியோ மற்றும் நியூயார்க்.

முயலின் வியர்வைச் சுரப்பிகள் அதன் காலடிகளில் உள்ளன.

******

அதிகரிக்கும் கேன்சர் பாதிப்பு

உலகில் அதிக உயிரிழப்பை கேன்சர் ஏற்படுத்துகிறது. பணக்கார நாடுகளில் அதிக அளவில் உயிரிழப்பை கேன்சர் நோய்தான் ஏற்படுத்துகிறது. இங்கு இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பை விட கேன்சரால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம். மேலும் உலக அளவில் இருதய நோயால் 2017இல் 1.77 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். இது உலகின் மொத்த உயிரிழப்பில் 40%. கேன்சரால் உயிரிழந்தவர்களின் சதவிகிதம் 26. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் இருதய நோயின் இறப்பு விகிதத்தைவிட கேன்சர் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது.

 ******

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit தகவல் களஞ்சியம் in FaceBook Submit தகவல் களஞ்சியம் in Google Bookmarks Submit தகவல் களஞ்சியம் in Twitter Submit தகவல் களஞ்சியம் in Twitter

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.