Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2021
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

பெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இரண்டாவது தமிழர் என்கிற பெருமையை  பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த அர்ச்சனா கடந்த மாதம் லக்னோவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 23.39 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். முதல் ஓப்பனிங் அத்லெடிக்ஸில்  மூன்று பதக்கம் வென்ற தடகள வீராங்கனை இவர்.

சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய ஓப்பன் அத்லெடிக்ஸ் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றில் 11.86 விநாடியில் இலக்கை அடைந்தார். அரை இறுதியில் 11.89; ஃபைனலில் இன்னும் சிறப்பாக 11.78. அந்த மூன்று சுற்றுகளில் அர்ச்சனாவின் அதிகபட்ச நேரம் 11.89 வினாடிகள்- என்பதால் அவர் தங்கப் பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 200 மீட்டர் மற்றும் அரை இறுதிப் போட்டியிலும் தன் லட்சியங்களை நோக்கிப் பாய்ந்தன அவருடைய பாதங்கள்!

“என் அப்பாவின் லட்சியக் கனவே எங்களில் ஒருவர் தடகள சாம்பியனாக உருவாக வேண்டும் என்பதுதான். அவரது கனவை நான் நனவாக்கி இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு. மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே நான் பள்ளியில் ஓட்டப் போட்டியில் பங்கு பெற ஆரம்பிச்சேன். அதில் பல பரிசுகளையும் பெற்றேன். அப்பாவும் அவரது பங்குக்கு தடகளப் போட்டி மேல் எனக்கு இருக்கும் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தினார். என்னுடன் கைகோத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். என்னுடைய முதல் பயிற்சியாளர் அவர்தான்னு சொல்லணும். அதன் பிறகு தடகளப் பயிற்சிக்காக திருநெல்வேலி, ஈரோடு  ஆகிய இடங்களில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற ஆரம்பித்தேன்.

அந்தப் பயணங்கள் என்னை தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கு பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதில் 4100 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றேன். அதன் பின்  தொடரில், 100 மீ., 200 மீ., இரண்டிலுமே தங்கம் வென்றேன். அப்போது எனக்கு 19 வயசு தான்.’’

“என் வெற்றிக்கு காரணமானவர் அவரது பயிற்சியாளர் ரியாஸ் ஆவார். “என் தந்தையைப் போலவே என்னை ஒரு சாம்பியனாகப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டவர் என் பயிற்சியாளர். அவரின் ஊக்கம் மற்றும் உற்சாகம் தான் அத்லெடிக்ஸில்  உயரம் தொட முடிந்தது.’’

“எனக்கு ரோல் மாடல், இன்ஸ்பிரேஷன் யாருமே கிடையாது’’ என்று அவர் சொல்லும்போதே அவர் தந்தையின் கனவை  நனவாக்கிய அவரின் வைராக்கியத்தை உணரமுடிந்தது.’’

“ஒரு தடகள வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வென்றுவிட்டால் போதும்ன்னு நினைக்கிறாங்க. மேலும் நம்மையும் அதைத் தாண்டி யோசிக்கவும் விடுவதில்லை. ஒருவர் செய்த சாதனையை முறியடி, நீ புதிய சாதனையை உருவாக்குன்னு யாரும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் தான் சாதனையை நோக்கி விரைவோம்! மற்றவர்களை விட இன்னும் சிறப்பா செய்ய முடியும் என்று உற்சாகப்படுத்தணும்.’’

“நமக்குத் தேவை ஒரு பதக்கம். அது உறுதியானதும் நிம்மதியாகிவிட்டோம். தங்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால், அரை இறுதியோடு திருப்தியாகிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு பொண்ணு, இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம் என நாம் திருப்திப்படும்போது அந்த எண்ணம் அவளது அடுத்த வெற்றிக்குத் தடையாக அமைய வாய்ப்புள்ளது. அவளால் இவ்வளவுதான் முடியும் என வகுக்க வேண்டாம். அவள் வேகத்தைத் தாண்டிப் போகிறவள். அவள் எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அதுவரை போகட்டும். குதிரையின் வேகத்தை விட அவள் உயரே எழுவாள்’’ என்கிறார் அவர்.         

                     (தகவல் : சந்தோஷ்)

 

 

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit பெண்ணால் முடியும் :  தடைகளைத் தாண்டி  சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா! in FaceBook Submit பெண்ணால் முடியும் :  தடைகளைத் தாண்டி  சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா! in Google Bookmarks Submit பெண்ணால் முடியும் :  தடைகளைத் தாண்டி  சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா! in Twitter Submit பெண்ணால் முடியும் :  தடைகளைத் தாண்டி  சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா! in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.