புற்றுநோய்ச் சிகிச்சையில் புதிய முயற்சி

ஜூன் 16-30

அமெரிக்காவிலுள்ள ‘ஜான் ஹாப்கின்ஸ்’ பல்கலைக்-கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி-கள் நடைமுறையிலுள்ள புற்றுநோய் ஒழிப்புப் போராட்டங்-களில் ஒரு முன்னேற்றப் படிநிலையாக புற்றுநோய் எப்படிப் பரவுகிறது. அது பரவுவதை மெத்தனப்படுத்துவது எவ்வாறு என்று கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக புற்றுநோயால் ஏற்படுகின்ற மரணங்களில் 90 சதவீதம் முதல் புற்றுநோய்க்கட்டி உடைந்து அதிலுள்ள புற்றுநோய்ச் செல்கள் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதாலேயே ஏற்படுகின்றன. இப்படி முதல் கட்டி உடைந்து அந்தச் செல்கள் பரவுவதை மருத்துவத்துறையில் ‘மெடஸ்டடிஸ்’ (Metastatis) எனப்படுகிறது.

தற்போது உபயோகத்தில் உள்ள மருந்துகள் எதுவும் இந்தப் பரவும் முறையை (Metastatis of cancer) தடுப்பதாக இல்லை. எனவே, இவர்களின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

முதல் புற்றுநோய்க் கட்டியில் புற்றுநோய்ச் செல்கள் வளர்ந்து மிக அதிக அளவில் அடர்த்தி நிலை ஏற்பட்டவுடன் அதில் இரண்டுவிதமான புரதம் உற்பத்தியாகி அந்தக் கட்டி உடைந்து அதிலுள்ள செல்கள் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கான வழி செய்யப்-படுகிறது. அப்படி உடைந்து வெளியேறும் செல்கள் இரத்த ஓட்டத்தின் மூலமோ, நிணநீர்ச் செயல்பாடுகள் மூலமோ மற்ற பாகங்களுக்குப் பரவுகின்றன.

கூட்டம் நிரம்பி வழிகின்ற ஒரு உணவு விடுதியில் இடம் கிடைக்காமையால் மற்ற உணவு விடுதிகளை நோக்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைப் போன்று இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்கிறார் இலங்கையிலிருந்து ஆராய்ச்சியில் கலந்துகொண்டுள்ள ‘ஹாசினி ஜெலதிலகா’ என்னும் விஞ்ஞானி.

மேலும் அவர் கூறுவதாவது ஒரு புற்றுநோய்க் கட்டி உடைந்து பரவுவது என்பது அது அளவில் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதைப் பொறுத்ததல்ல. ஆனால், அதில் எந்தளவுக்குச் செல்களின் அடர்த்தி மிகுந்திருக்கிறது என்பதைப் பொறுத்ததே என்கிறார்.

ஜெயதிலகாவும் அவருடைய சக விஞ்ஞானிகளும் இந்தக் கட்டி உடைந்து பரவ வேண்டும் என்கிற ‘நுண்ணிய செய்தியறிப்-பினை’த் தடுக்கக்கூடிய ஒரு கலவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இந்த முறை இன்னும் மனிதர்களிடத்தில் செயல்படுத்திப் பார்க்கப்படவில்லை.

விலங்குகளிடத்தில் செயல்படுத்தியதில் மிகச் சாதகமான விளைவுகளே தெரிகின்றன என்று கூறுகிறார்கள். இந்தச் சிகிச்சை முறை புற்றுச் செல்கள் தூண்டப்பட்டுக் கட்டி உடைந்து பரவுகின்ற உயிரியல் செயல்பாட்டினைத் தடுப்பதில் வெற்றி கிட்டும் நிலையை எய்தியுள்ளதாகவே ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மருந்து தயாரிப்பு நிலையங்கள், கட்டி உடைந்து பரவும் தன்மையை புற்றுக் கட்டியின் மற்றொரு உற்பத்தியாக பார்க்கிறார்கள். ஆனால் எங்கள் ஆராய்ச்சி, உடைந்து பரவும் (matastatis) தன்மையையே தடுக்கும் விதத்தில் அமைவதால் புற்று நோயாளிகள் சீக்கிரம் குணமடையும் நிலையை ஏற்படுத்துவதாகும் என்கிறார் ‘ரிட்ஸ்’ (Writz) என்னும் ஆராய்ச்சியாளர்.

இந்தக் குழு ‘டாசிலிஜூமாப்’ (Tocilizumab), ரெப்பராக்சின் (reparaxin) என்ற இரு மருந்துகள் கட்டி உடைந்து புற்றுச் செல்கள் மற்ற பாகங்களுக்குப் பரவுவதை தடுப்பதாகக் கண்டறிந்துள்ளனர். Tocilizumab மருந்து மூட்டு வலிகளுக்கும் மற்றும் ஓவரியன் புற்றுநோய்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

reparaxin மார்பகப் புற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவர்களின் கண்டுபிடிப்பில் இந்த இரண்டு மருந்துகளையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது ஆரம்ப புற்றுநோய்க் கட்டி வளர்வதைத் தடுக்கவில்லையானாலும் அந்தக் கட்டி உடைந்து மற்ற பாகங்களுக்குப் பரவும் தன்மையான விமீtணீstணீsவீக்ஷ்மீ (மெட்டஸ்டாசிஸ்) தடுக்கப்-படுகிறது.

எனவே, நாங்கள் இச்சிகிச்சை-யில் ஒரு புதிய பாதையைக் கண்டிருக்கிறோம் என்று பெருமையுடன் கூறுகிறார் ஜெயதிலகா. மேலும் மேலும் அவர்களின் முயற்சிகள் வென்று புற்றுநோய் முற்றாக ஒழிக்கப்பட அவர்களை வாழ்த்துவோம்!

செய்தி: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ – 31.5.2017
தொகுப்பு: கெ.நா.சாமி

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *